என்னடா எழுதுவது என்று கொஞ்சம் யோசித்தபோது தோன்றியது இது.
என்னை பல நேரங்களில் சிலிர்க்க, சில நேரம் சிரிக்க வைத்த ஒரு பாத்திரம்.
அநியாயத்துக்கு ஒரு காம்ப்ளெக்ஸ் படைப்பு.
எந்த காலத்திலும் எதோ ஒரு கிருஷ்ணரின் இயல்பு அக்காலத்துக்கு எற்றுக்கொள்ளமுடியாதபடி இருந்திருக்கும்.
தானே தன் அடுத்த நடிவடிக்கையை தேர்ந்தெடுக்க முடிந்த ஒரே ஆள் , நம்ம ஆள்தான் :).
முடிவெடுத்துட்டா எடுத்ததுதான் !
ஒரு ஹீரோவாக பார்த்தால் , யாரும் பக்கத்தில் கூட வர முடியாதது...
காதல் , நகைச்சுவை , தொடை தட்டி படை முடிக்கும் திறன் , தத்துவம் , பஞ்ச் லைன்கள் என இப்போதுள்ள மசாலா பட ஹீரோவின் அத்தனை அம்சங்களும் அடங்கியவர் - அப்போதே !
***************************************************************************************
நினைத்து பார்க்கிறேன் , சுவாமிக்கு முற்றுமாக அலங்காரம் செய்து பின்னர் திரையை சடாரென்று விலக்கி , தீப ஆராதனை செய்வதும் , அதை கண்டு நம் மக்கள் பரவசம் கொள்வதும் .... அந்த காலத்தில் கடவுளை மட்டுமே எந்த சமுதாய மாற்றத்திற்கும் நம்பிய நம் மக்கள் மனதில் - ஒரு Action Hero Image இவருக்கும் இருந்திருக்கக்கூடும்.
*****************************************************************************************
இந்த கிருஷ்ணா என்கிற Charecter எனக்கு பிடிக்க ஆரம்பித்தது ஓஷோவின் புத்தகத்தை படித்த பின்னரே ...
எனவே வருங்காலத்தில் நான் பகவத் கீதையை படித்தாலும் , பக்தி எனக்கு உருவானாலும் , அதில் ஓஷோவின் பங்கு பெரியதாக இருக்கும்.
Eventhough it travels in a completely different path from OSHO. எனவே வருங்காலத்தில் நான் பகவத் கீதையை படித்தாலும் , பக்தி எனக்கு உருவானாலும் , அதில் ஓஷோவின் பங்கு பெரியதாக இருக்கும்.
கர்ணனின் கதை என்ற பாலகுமாரனின் நாவலில் வரும் ஒரு பகுதி , கிருஷ்ணனின் லீலைகள் ஏன் என கர்ணன் த்யான நிலையில் யோசிப்பதாய் வரும் ... அருமையாக இருக்கும் .
அவரே எழுதிய மற்றுமொரு கதையில் , சுபத்திரையை திருமணம் செய்ய நினைக்கும் அர்ஜுனனிடம் கிருஷ்ணர் வாதிடும் இடங்களும் அருமையாக ஹாஸ்யத்துடன் இருக்கும்.
******************************************************************************
எனக்கும் பலரை போல கடவுளை பற்றிய குழப்பங்கள் உண்டு , ஆன்மீகத்தில் உள்ள அளவுக்கு ஏனோ பக்தியில் இன்னும் ஈடுபாடு இல்லை .
பூஜை செய்வது கூட இல்லை ,
எது எவ்வாகிலும் அதுவொன்றே உள் உள்ளமை
புரிந்தரியா அறிவுவெறும் பாட !
என்ற குரளுக்கேற்ப (தமிழ் அன்பர்கள் மன்னிக்க :) )
என் நண்பர் 'வினோத்' மெல்லிய பின்னணி இசை சேர்த்து நான் பாடிய (எனக்கே பிடித்துப்போன ) நான்கு வரிகள் ...
என்ற குரளுக்கேற்ப (தமிழ் அன்பர்கள் மன்னிக்க :) )
என் நண்பர் 'வினோத்' மெல்லிய பின்னணி இசை சேர்த்து நான் பாடிய (எனக்கே பிடித்துப்போன ) நான்கு வரிகள் ...
நீங்களும் கேட்டு பார்த்து பின்னூட்டம் போடவும்