இக்காலத்தில் கமலுக்கு பல தேவை இல்லாத சுமைகள்;
ஒவ்வொரு படத்திலும் வித்தியாச விரும்பி என்று நிரூபித்தாக வேண்டும்
உலக நாயகன் என்ற தேவை இல்லாத பட்டம் (இதுக்கு அர்த்தம்தான் என்னங்க ... ? )
அப்போல்லாம் கமல் படம் நல்லா இருந்துது என்கிற Nostalgic Feeling இல்லை இந்த பதிவு .
ஆனால் இப்போது தேவை இல்லாத பாரங்களை சுமந்து கொண்டு ; நானே ராஜா நானே மந்திரி என்று எல்லாவற்றையும் என் செய்ய வேண்டும்.
உண்மையில் Common man தோற்றமும் சரி , Nassiruddin Shah வின் இயல்பான நடிப்பும் சரி ,
அன்யாயதுக்கு உன்னை போல் ஒருவனில் மிஸ்ஸிங்.
சண்டை போட வருபவர்கள் ... இதை பார்த்துவிட்டு மனசாட்சியுடன் பேசவும் ...
என் ஆதங்கம் தவறா ?
Chakri உ.போ.ஒ னில் எந்த அளவுக்கு இயக்குனராக இருந்திருப்பார் என்பது சொல்ல தேவை இல்லை .
இருந்தாலும் இன்னொருவர் படைப்பில் நடிகனாக மட்டும் இருத்தல் கமலின் திறமைக்கும் அனுபவத்துக்கும் அவ்வளவு என்ன கேவலத்தை கொடுக்க போகிறதோ ?!.
கமலின் நடிப்பு திறன் உபயோகப்படுத்தப்பட்டு பல வருடங்கள் ஆகிறதோ என தோன்றுகிறது .
கமலே ஒரு பேட்டியில் சொன்னது போல ... ( சில காலம் மைக்கை மட்டும் பிடித்துகொண்டிருந்த போது மோகன் வந்து காப்பாற்றினார் , நடனம் நானே என்ற போது
பலர் வந்து காப்பாற்றினர் , .... இப்படி போனது )
இப்போதிருக்கும் சூழ்நிலையிலும் கமலே எல்லாம் செய்ய வேண்டும் என்பதில்லை , நல்ல இயக்குனர்களுக்கு நடிப்பின் நுட்பத்தை இயல்பாக வெளிப்படுத்தும் நடிகர்கள் தேவைபடுகிறார்கள் , அவர்களின் கனவை நனவாக்க உதவுவது உத்தமம்.

இந்த விஷயத்தில் நான் சாரு நிவேதிதாவின் கட்சி .....
கமலிடம் உள்ள சுமைகளை குறைத்து அவரை ப்ரீயாக முதன்மையான பாத்திரத்தில் மட்டுமே இல்லாமல் பார்க்க துடிக்கும் Common Man நான்..
இதை இந்தியாவின் மிகப்பெரும் நடிகர்கள் பலர் வழிமோழியும்படி வாழ்கையே வாழ்துகொண்டிருக்கும்பது போது .... நம் கமலுக்கு என் இன்னும் வீராப்பு .
நாந்தான் எல்லாவற்றையும் முதலில் செய்திருக்க வேண்டும் என்ற என்னமா ...?
அவர் சொல்லும் முதல்களில் எத்தனை உண்மை என்பதே சந்தேகமாக உள்ளது .... இப்போதெல்லாம் தேவை இல்லாத விளம்பரங்கள் வேறு ....
இவ்வளவுதான் எதிர்பார்க்க முடியும் என்ற நிலையை எந்த நடிகரின் படம் முன்கூட்டியே தந்தாலும் எனக்கு ஏனோ பிடிப்பதில்லை ,
கமலை பிடித்ததன் காரணமும் அதுவே , பல நடிகர்களை பிடிக்காததன் காரணமும் அதுவே ( பத்து வருடங்களாக ) ... ஏனோ இப்போது ஒரு சலிப்பு தோன்றுகிறது ....
போதும் கமல் ... உங்கள் தோள்களில் உள்ள சுமையை (குறைந்த பட்சம் தேவை இல்லாததை மட்டுமாவது ) .. இறக்கி வைத்து . சிலரிடம் ஹாயாக உங்களை ஒப்படைதுதான் பாருங்களேன் .... நடிப்பு , திரைக்கதை , பாடல் ... எதிலும் ... உங்கள் விருப்பம். இது நீங்கள் ஏற்கனவே செய்ததே .....
People would understand how much you are open - Only when you say that your time is available ... SINCE IT SEEMS YOU ARE BIG for them.
கமல் நடிக்கும் படமே என்றாலும் சினிமா என்றல் ஒரு "கூட்டு தயாரிப்பு " என்ற சொல்லிலிருந்து மீள முடியாது .
கனவுள்ள இயக்குனர்கள் உள்ளனர் . Too much of influence will not make sence in cinema ...
இது ஒரு வியாபாரமோ தொழிற்சாலையோ போன்றதல்லவா ... ?
எல்லாவற்றையும் உங்கள் விருப்பபடியே வார்ப்பது கடினம் , என்னை கேட்டால் தேவையற்றதும் கூட .
எல்லாவற்றையும் உங்கள் விருப்பபடியே வார்ப்பது கடினம் , என்னை கேட்டால் தேவையற்றதும் கூட .
பிறகு உங்கள் சினிமா ஒரு சுயதொழிலாகவே அமையும் , தாங்கள் சொல்லிக்கொள்வது போல கூட்டு முயற்சியாக இராது .
It needs a lot of Delegation and Trust towards people.
படங்களில் வித்யாசம் இருக்க பாடுபடும் நீங்கள் , உங்கள் பார்வையிலும் ... ஏன் பாதையிலும் வித்யாசம் காட்டி கருணை வைத்தால் ... உங்களை கொண்டு படைப்புகள் பல தர என்னை பொறுத்த வரை இயக்குனர்கள் என்னமோ தயாரே.
இது நடந்தால் , ஐந்து வருடத்துக்குள் , பல அருமையான படைப்புகளில் உங்கள் பங்கு இருக்கும் என்பது எனக்கு தெரியும் .....
இதை செய்யாமல் விட்டுகொண்டிருந்தால் ... நஷ்டம் சினிமாவுக்கோ , பார்வையாளர்களுக்கோ அல்ல ...
Men may come ... Men may go ....
Common Cinema Fan ..... (Not only kamal's)
2 உங்க மனசுல பட்டது:
சரிதான் அறிவு.வேட்டையாடு விளையாடு அப்படித்தான் செய்தார். கமல், என்னைப் பொறுத்தவரையில் அடுத்தவர்களோடு எளிதில் உடன்பட மாட்டார். அந்த காரணத்தினாலே பல நல்ல இயக்குனர்களோடு அவரால் சேர்ந்து பணியாற்ற முடியவில்லை..
ஆனால் ஒன்று, எந்த ஒரு கலையும் அது சார்ந்த மண்ணின் பெருமையை, கலாச்சாரத்தை, பாரம்பரியத்தை ஓட்டி அமைந்தாலே கிளாசிக் ஆகும்.. தேவையே இல்லாமல் முத்தகாட்சி வைத்தே ஆகனும் என்பது போன்ற சில சின்ன விஷயஙக்ளை விட்டொழுந்தாலொழிய கமல், நீங்கள் சொன்ன காமன் மேன் என்பவனிடம் ரஜினி போல் சென்றடைய முடியாது.. இது என் கருத்து
முத்த காட்சிக்கோ , மசாலா காட்சிக்கோ எதிரானவன் நான் அல்ல ...
ஆனால் தேவையோ , கோர்வையோ , கதாபாத்திரத்தின் தன்மைக்கோ துளியும் ஒத்து போகாமல் வரும் எந்த காட்சிக்கும்.
உதாரணம் ஆதியில்
விஜயும் த்ரிஷாவும் உருக்கமாக பேசிக்கொண்டிருக்கும் பொது வந்த "ஒல்லி ஒல்லி இடுப்பே " பாடல் ஏனோ தாங்க முடிவதில்லை ... பார்த்து என் மனைவியும் என்னுடன் சேர்ந்து சிரித்துகொண்டிருந்தாள் (அவளும் ஒரு விஜய் fan) :)
மற்றும் ,
சம்பந்தமே இல்லாமல் பில்லாவில் திடீரென்று நமீதா அஜித்திடம் "உன்ன எனக்கு எவ்ளோ பிடிக்கும் தெரியுமா " என்று கேட்பதும் கொடுமையே ...
சாகும் தருவாயில் காதலிக்கு தரும் புன்னகை மன்னன் முத்தம் வேறு ....
கமலின் மற்ற முத்தங்கள் வேறு ....
முத்தம் என்பதில்லாமல் வந்ததுதான் மண்ணின் மனம் கொண்ட படம் என்பதிலும் . அதே போல் மண்ணின் மனம் சொல்லும் / மாறாத படங்களில்தான் ரஜினி நடித்தார் என்பதும் ஏனோ எனக்கு உடன்பாடில்லை.... மன்னிக்கவும் !!
Post a Comment