Sunday, October 11, 2009

நம்பிக்கையல்ல ....... நிஜம் !!

இருவேறு பரிசுகளை , வேறு வேறு நேரங்களில் தந்தாய்.
ஒன்று - நீ எனக்குள் விதைத்தது (அல்ல - விதைந்தது )
இரண்டு - நீ எனக்காய் அளித்த செல்ல நாய் பொம்மை

இரண்டுக்குமே  உயிருண்டு , வெறும் நம்பிக்கையல்ல ....... நிஜம் !!


வெளியே வந்தால் இரண்டுமே அழுக்காகிவிடும் என்பதால்
முன்னதை நினைவுகளாலும் ,
பின்னதை பிளாஸ்டிக் பையிலும் ....... கட்டியே வைத்தேன் .


இப்போது உயிருள்ளது என்றாலும் , இரண்டுமே என்றேனும் மூச்சு முட்டி இறந்துவிடுமோ என்ற பயம் ....

காற்று உட்செல்லும் அளவுக்கு , பின்னதற்கு பிளாஸ்டிக் பையின் வாயை லேசாக திறந்து விட்டேன் ...

உள்ளே உள்ள மற்றது  உதடு துடித்துக்கொண்டு கேட்டது ..... நானு ? !!!!

கொஞ்ச ஆரம்பித்தேன் ,
ஏண்டா கண்ணா , உனக்காகத்தானே இவ்வளவும் எழுதினேன் என்று !!!

 - சொல்லா (சொல்ல முடியா) காதலின் தவிப்பு

                    
                                            

1 உங்க மனசுல பட்டது:

said...

நல்லா இருக்கு.. அந்த ஃபோட்டோவும்..

அப்படியே இந்த word verification கமெண்ட் போட வசதியா இருக்கும் :))