Thursday, October 8, 2009
சமீபகாலமாய் எனை ஆட்கொண்டிருக்கும் சங்கீதம் !!
என் மகள்
வாழ்க்கையில் பொறுப்பு என்பதை அலுவலக வேலையிலும் கூட எனக்கு சொல்லி தந்தவள் பெற்றெடுத்த தங்கம் .
குழந்தைகளுக்கு பொதுவாகவே - பார்த்து இவர்தான் என யாரையும் தெரிந்துகொள்ள , நாம் வந்த உடன் முகத்தை பார்க்க கூட சில வாரங்கள் ஆகிவிடும்.
ஆனால் இவளோ , பிறந்த அன்று மாலையே லிப்டில் செல்லும்போது வந்த இசையில் லயித்து புன்னகைத்தவள். பிறந்த குழந்தையும் மயங்குகிறது .
ஆச்சர்யம் என்னவென்றால் , ஒரே பாடலை நானும் என் மாமனாரும் திரும்பி திரும்பி பாடியே அவளை பல நாள் தூங்க வைக்க வேண்டி இருந்தது. குழந்தைக்கும் விருப்பங்கள் பிறக்கும்போதே உருவாகி விடுகிறதோ ?
ஏற்கனவே முடிவு செய்து வைத்திருந்தபடி ஒரு நன்னாளில் பெயர் சூட்டினோம் - "சஹானா"
Posted by :
இசைப்பிரியன்
Labels:
என் வாழ்க்கை
Subscribe to:
Post Comments (Atom)
2 உங்க மனசுல பட்டது:
"Sahana" ! azhagana peyar ! azhagana ragam !
நன்றி திரு.பாலாஜி அவர்களே
என் தந்தைக்கும் மிகவும் பிடித்த ராகங்களில் ஒன்று ... (கேள்வி ஞானம் மட்டுமே ).
ஆனாலும் , உன்னிகிருஷ்ணன் பாடிய "வந்தனமு ரகுநந்தனா ... " வுக்கு பிறகு ... அவரின் favourite ஆகிப்போனது ....
சில பெயர்களை உச்சரிக்கும்போதே சங்கீதம் ஒட்டிக்கொளும் , அப்படி ஒன்று இது ... என் இருபதாவது வயதில் எடுத்த முடிவு ... :)
அவளும் responsive to quality music ...
தங்கள் வருகைக்கு நன்றி ... Ariv
ஆசிர்வாதங்களும் வேண்டி Sahaana :)
Post a Comment