Tuesday, October 13, 2009

இந்த வார ....... காமெடியும் / கடுப்பும் :) / :(

  வாழ்க்கையில்  பல  நேரங்களில்  , நாம்  நமக்குள்  நடக்கும் காமெடியை  கவனிக்காமல்  விட்டுவிடுவோம்  ....
நானும்  என்  மனைவியும் கூட  , எல்லோரையும்  போல  , சண்டையும்  சகலமும்  கலந்து கட்டி முட்டி உடையும் ஜோடிதான் என்பதால் ...

இதையே பதிவாக போடலாமே என்று ஒரு சின்ன ஐடியா ...
நல்லா இருக்கில்ல ?

So , Coming to the Matter

இந்த வார ....... காமெடி!
*************************
நாள்  : Monday 12th oct
சமயம்  : Vijay டிவியில்  , உலக  நாயகன் 50 பார்க்கையில்


SPB அவர்கள் மேடை ஏறினார் .
எதிரே உள்ள மேடையில்   கமல் , ரஜினி , இளையராஜா  மூவரும் ....

பாடலை பாடும் வகையில்  எனக்கு மிகவும் பிடித்த ஒன்று .... UNPLUGGED எனப்படும் ..
இயற்கையாய் ,... தாள முக்கியத்துவம் குறைந்து ,.. PIANOவோடு பாடகர் குழைந்து , ஒவ்வொரு நுன்னோடிகளையும் ரசித்து பாடுவது ...

பாடுபவரின் கற்பனையும் , இப்படி பாடி இருக்கலாமோ என்று அவர்கள் பிறகு எண்ணியவற்றையும் சேர்த்துக்கொள்ளலாம் ...
பியானோவில் வரும் வித்தியாசமான Running Chords வேறொரு தளத்தில் சில நேரங்களில் நின்று .... இதுவரை கேட்டிராத ஒரு புது உணர்வும்/உருவமும்/பாலும்/பழமும் ..... என்னமோ பண்ணும் சார்.

இப்படியாக நான் கிரங்கிக்கொண்டிருக்கையில் , வந்தது இரண்டாவது பாடல் ...
தெலுங்கில் "மௌனமான நேரம்" என்று ; ஆஹா ... பாடிப்பார்த்தால் அழகு நம் குரலில் தானாக சேரும்.
எதிரே ஒரு மன்னன் (ராஜா) .. இப்படி பல பொக்கிஷங்களை உருவாக்கி விட்டு
என் நண்பன் பரணி எழுதிய கவிதையில் வரும் ... "இது நான் 'எய்துவிட்ட' அம்பாகையால் - எனக்கு இனியும் சொந்தமில்லை"  என்பது போல ...
இவன் இதை எப்படி பாடுகிறான் ( SPB யை ராஜா அப்படித்தான் நினைத்திருப்பார் ) என்பதை மட்டும் கவனித்துகொண்டிருந்தாரோ ?

அப்போது நீங்கள் ரஜினியின் முகத்தை பார்த்திருக்க வேண்டும் ... எங்கே போனது இம்மெல்லிய தமிழ்த்திரையிசை என்பது போன்ற உணர்வை தேக்கி வைத்து ... அவ்வுணர்வு அவருக்கே புதுவுலகை தந்தது போல ... அதை மாற்ற நினையாமல் அப்படியே விட்டுவிட்டார் ....
இளையராஜாவின் பாடல்களில் பல உருப்படாதவையாயினும் , சீக்கிரமே இன்னொரு நல்ல பாடல் FM வழியேனும்  வந்து  நம் மனதில் உள்ள அவரின் நிரந்தர அரியாசனையை முட்டு கொடுத்து நிறுத்தி வைத்துவிடுகிறது.

கரைந்துகொண்டிருந்த என் இதயத்தின் ரசாயன மாற்றம் தாள முடியாமல் தவித்துகொண்டிருக்கையில் ..

என் மனைவி கேட்டாள் ...

SPB க்கு யார் Coat Stich பண்றாங்கன்னு தெரிஞ்சா நல்லதுpa ... நல்லா இருக்கு இல்ல ? என்றாள் - ( சற்றே குண்டான என் உடலாலோ என்னவோ ) ...

அர்ர்ர்ர்க்க்க்க் , கையை கடித்துகொள்ளலாமா என்றாகிவிட்டது  .... அவளும் சிரித்துவிட்டாள்
 
இதைதான் அப்போதே ஓஷோ ஒரு வரியில் சொன்னார் -  A ROSE is A ROSE is A ROSE.


இந்த வார ....... கடுப்பு !
*************************

நீங்க இப்போ ஏத்தாதீங்க ..... :(

மேல உள்ள எல்லாத்தையும் படிச்சுட்டு , நான் இன்னும் வேற - ஒரே வாரத்துல அனுபவிக்கனும் போல ...

அடுத்த  வாரம் பாக்கலாம்

 - நா வாரேன்

3 உங்க மனசுல பட்டது:

said...

"இது நான் 'எய்துவிட்ட' அம்பாகையால் - எனக்கு இனியும் சொந்தமில்லை"//

பரணியின் பல கவிதைகள் எனக்கு பிடித்தமானது..

கொஞ்சம் புள்ளிகளை குறைத்து கொள்ளுங்கள் பாஸ். எங்க அவ்ரி முடியுதுன்னு குழம்பி போயிட்டேன்..

ஓஷோ சொன்னது புரியாமத்தான் இங்க எல்லோரும் தன்னைத்தானே அறிவுஜீவின்னு நினைச்சுக்கிறாங்க. அவங்க அவங்க priority அவங்க முடிவு செய்யனும். நமக்கு பிடிச்சதுதான் சரின்னு சொன்னா எப்படி?

அடிகக்டி எழுதுங்க.. ஃப்ளோ நல்லா வரும்ன்னு தோணுது.

said...

ஐயய்யோ , நீங்க தப்பா எடுத்துகிட்டீங்க.
இது எனக்கும் என் மனைவிக்கும் பழகிவிட்ட (இப்போது இருவருமே புரிந்து சிரிக்கும் ஒன்று).

அதனால்தான் , A Rose is a Rose is a Rose. கலையில் அவளும் சளைத்தவள் அல்ல , அவள் கலை வேறு ...

அவளும் நடனம் தெரியாத , கதை-கவிதை புரியாத புருஷனக்கு வாக்கப்பட்டவள்தானே !.

ஆனால் அவள் என்னை விட வாழ்க்கையை புரிந்தவள் , எனக்கு இன்னமும் பொறுமையாக புரியவைத்துகொண்டிருப்பவள்.

மூன்று வருடங்களாக என்னை கட்டிபோட்டிருக்கும் முதல் பெண் !!

said...

தெய்வமே நீங்கதான் தப்பா புரிஞ்சிக்கிட்டீங்க.. நான் புரியாத ஜீவிகள்ன்னு சொன்னது உங்கள இல்ல :))